Skip to main content

ரிலையன்ஸ் கரோனா தடுப்பூசி - மனிதர்கள் மீதான சோதனைக்கு அனுமதி!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

mukesh ambani

 

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்குப் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தவிர ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுக்கும், ஸைடஸ் கடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் இந்தியாவில் இதுவரை அவசரகால அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தியாவில் சில கரோனா தடுப்பூசிகள் சோதனை கட்டத்தில் உள்ளன. இந்தநிலையில், ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம், புரோட்டீனை அடிப்படையாகக் கொண்ட கரோனா தடுப்பூசி ஒன்றைத் தயாரித்துவருகிறது. கடந்த வருடத்திலிருந்து இந்தக் கரோனா தடுப்பூசியின் தயாரிப்புப் பணிகள் தொடங்கி நடந்துவரும் நிலையில், அண்மையில் ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம், தங்களது தடுப்பூசியை மனிதர்கள் மீது முதற்கட்டமாக சோதனை நடத்த அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்தது.

 

இந்தநிலையில் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், தற்போது மனிதர்கள் மீது முதற்கட்டமாக ரிலையன்ஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளார். மனிதர்கள் மீதான இந்த முதற்கட்ட தடுப்பூசி சோதனை, 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்கள் மீது மட்டும் நடைபெறவுள்ளது. மஹாராஷ்ட்ராவில் 8 இடங்களில் மனிதர்கள் மீதான ரிலையன்ஸ் தடுப்பூசி சோதனை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்