சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமைத் தர மறுத்த மருத்துவரைத் தாக்கிய மகளின் செயலுக்கு மிசோரம் மாநில முதலமைச்சர் மன்னிப்புகோரியுள்ளார்.
மிசோரம் மாநில முதலமைச்சர் ஸ்சோரம்தங்காவின் மகள் மிளரி, மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் உள்ள மருத்துவமனைக்கு முன்பதிவு இல்லாமல் சென்ற அவர், மருத்துவரைச் சந்திக்க முயன்றுள்ளார். முன்பதிவு செய்து நேரம் பெற்று ஆலோசனை பெற வருமாறு, மருத்துவர் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மிளரி, மருத்துவரையும், மருத்துவமனையும் ஆவேசமாகத் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிச் சர்ச்சையாகியுள்ளது.
தனது மகளின் செயலுக்காக முதலமைச்சரிடம் ஸ்சோரம்தங்கா, பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.