damage; Luckily the train escaped

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனமழை பொழிந்து வரும் நிலையில் ரயில்வே தண்டவாளத்தின் அடிப்பகுதி ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னதாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சென்னை நோக்கி சாமினார் விரைவு ரயில் புறப்பட்டு இருந்தது. ஹைதராபாத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயவாடாவுக்கு 50 கிலோமீட்டர் தூரத்தில் திடீரென தண்டவாளம் பகுதியில் தேங்கிய மழை நீரால் அரிப்பு ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை இரண்டு மணியிலிருந்து சாமினார் ரயில் நிறுத்தப்பட்டது. விடிய விடிய ரயில் பயணிகள் அவதிப்பட்ட நிலையில் தற்பொழுது அனைவரும் பேருந்து மூலம் விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில் முன்னதாகவே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment