யூ-டியூப் சேனல்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து, அது குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களை கடந்தால் வீடியோவை பதிவேற்றியவருக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, யூ-டியூப் நிறுவனம் பணம் கொடுக்கும். இந்நிலையில், ரயில் வரும்போது தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து வீடியோ எடுத்து யூ-டியூப்பில் இளைஞர் ஒருவர் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் ஏர்பேடு பகுதியை அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி.இவர் ஹைதராபாத் அருகே சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தனது யூடியூப் சேனலில் அபாயகரமான வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் அதிகளவு பணத்தையும் அவர் லாபமாக பார்த்துள்ளார்.இந்நிலையில், தனது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்து, ரயில் கடக்கும்போது அதனை வீடியோவாக எடுத்து அவருடைய யூ-டியூப் சேனலில் பதிவிட்டு உள்ளார்.