Skip to main content

மழைநீரை அகற்றியபோது சிக்கிய முதலை; குடியிருப்பு வாசிகள் அச்சம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

 A crocodile trapped while draining rainwater; Residents fear

 

மழை நீரில் முதலை அடித்து வந்த சம்பவம் தெலங்கானாவில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ஹன்மகொண்டா பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியில் மழை நீரானது தேங்கி நின்றது. மழை நீரை அப்புறப்படுத்த ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியிலிருந்த புதர்கள் அகற்றப்பட்டு மழைநீர் விடுவிக்கப்பட்டது. அப்பொழுது  தேங்கி நிற்கும் மழைநீரில் முதலை ஒன்று இருந்தது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி கயிற்றில் சுருக்கு போட்டு முதலையை வெளியே கொண்டு வந்தனர். அந்த பகுதியில் மழைநீர் தேங்கும் நேரங்களில் இதுபோன்று முதலைகள் அடித்து வருவது வழக்கமான ஒன்றுதான், இருப்பினும் தற்போது அளவில் பெரிய முதலை சிக்கியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணி; ஐஏஸ் அதிகாரிகள் நியமனம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Storm Prevention and Rescue Mission Appointment of IAS Officers

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்கென இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 7.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலில், புதுச்சேரியிலிருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையிலிருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரிலிருந்து 330 கிமீ தெற்கு தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Storm Prevention and Rescue Mission Appointment of IAS Officers

 

அதன்படி சென்னை மாநகராட்சியின் மண்டலம் - 1 கந்தசாமி, மண்டலம் - 2 திவ்யதர்ஷினி, மண்டலம் -3 சங்தீப் நந்தூரி, மண்டலம் - 4 எஸ். பிரபாகர், மண்டலம் - 5 கே. விஜய கார்த்திகேயன், மண்டலம் - 6 பி. கணேசன், மண்டலம் -7 எஸ். சுரேஷ் குமார், மண்டலம் 8 எஸ். பழனிச்சாமி, மண்டலம் 9 எம். பிரதாப், மண்டலம் -10 எஸ். அருண்ராஜ், மண்டலம் -11 இ. சுந்தரவள்ளி, மண்டலம்-12 ஏ.கே. கமல் கிஷோர், மண்டலம்-13 எம்.எஸ். பிரசாந்த், மண்டலம்-14 வி.ஆர். சுப்புலட்சுமி, மண்டலம் -15 கொ. வீரராகவ ராவ், தாம்பரம் மாநகராட்சி ஜான் லூயிஸ், ஆவடி மாநகராட்சி ஏ. சண்முக சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் 1913 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிக்ஜாம் புயல் குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Meteorological Department key information on Cyclone Migjam

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்று (03.12.2023) மாலை 5.30 மணி நிலவரப்படி மிக்ஜாம் புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

 

கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து புயல் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை (04.12.2023) முற்பகல் வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலைகொண்டு, பிறகு கரைக்கு இணையாக வடக்கு திசையில் நகர்ந்து, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்