Skip to main content

போக்சோ வழக்கில் சிக்கிய எடியூரப்பா; அதிரடி காட்டிய நீதிமன்றம்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
 The court showed action on Yeddyurappa caught in POCSO case

பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடகா மாநிலத்தின், முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது கடந்த மார்ச் 15ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்டு அவர் மீது போக்சோ வழக்குப் தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார்.  பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த பெண் உயிரிழந்திருப்பது குறித்து சதாசிவ நகர் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் எடியூரப்பா விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தேவைப்பட்டால் பா.ஜ.க மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவார். இது குறித்து மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முடிவெடுக்கும்” என்று கூறினார். 

மேலும், இந்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் எனச் சிறுமியின் சகோதரர் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்