Court allows archeology department to carry out survey at Gnanawabi Masjid

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகேகாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்க தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஐந்து பெண்களின் மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபிமசூதியில் ஆய்வு மேற்கொள்ள தற்போது அனுமதி அளித்துள்ளது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத்தடையும் இதனால் ஏற்படக் கூடாது எனத்தெரிவித்துள்ளது. மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத்தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அறிவியல் ஆய்வறிக்கையை வரும்ஆகஸ்ட் 4 தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.