Published on 02/03/2023 | Edited on 02/03/2023

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் மூன்று மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்குப் பிறகான இந்தத் தேர்தலின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது காங்கிரஸ். அதேபோல் தீவிரப் போட்டியில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.