/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ncb-raid-onboard-a-mumbai-cruise-was-forgery-nawab-malik.jpg)
கடந்த அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெற்றதாகத் தகவல் கசிய, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அக்.03 அன்று காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரும் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் கடந்த 4 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அக்.7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உரியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் ஆரியன்கானிடம் நடத்திய விசாரணையில், கடந்த நான்கு வருடங்களாகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக அவர் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கப்பலிலிருந்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை மருந்து விற்றதாகக் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் நாயர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரியன்கான் ஸ்ரேயாஸ் நாயர் மற்றும் அவருடன் கைதான மற்றொரு நபர் என மூவரும் அடிக்கடி பார்ட்டி கொண்டாடியிருப்பது அவர்களின் செல்ஃபோன் வாட்ஸ் அப் உரையாடலில் தெரியவந்துள்ளது எனப் போதை ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mon2.jpg)
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தரப்பில் அவரது மகனை மீட்க அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல் வெளியான உடனே ஸ்பெயினில் படப்பிடிப்பிலிருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார். மகன் ஆர்யன்கானுக்காக இந்தியாவிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர் சதீஸ் மான்ஷிண்டேவை நாடியுள்ளது ஷாருக்கான் தரப்பு. இவர் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பாராம். இதில் மிகவும் குறிப்படைத்தகுந்தது சதீஸ் மான்ஷிண்டே, பல பாலிவுட் பிரபலங்களின் வழக்குகளில் வாதாடி ஜாமீன் வாங்கி கொடுத்தவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mon3.jpg)
1983 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற துவங்கிய மான்ஷிண்டே, இந்தியாவில் பல பிரபலங்களுக்கு வாதாடிய ராம்ஜெத் மலானியிடம் 10 வருடங்கள் ஜூனியராக பணியாற்றியவர். பாலிவுட் பிரபலங்களுக்காக இவர் பல வழக்குகளில் வாதாடியுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய நடிகர் சஞ்சய் தத்திற்காக 1993 ஆம் ஆண்டு வாதாடி ஜாமீன் பெற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல் 2007 ஆம் ஆண்டு சட்டவிரோத ஆயுதப் பதுக்கல் வழக்கில் மீண்டும் சஞ்சய் தத்துக்கு வாதாடிய குழுவில் மான்ஷிண்டே இருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/man1.jpg)
1998-ல்மான் வேட்டை வழக்கு, 2002-ல் மது அருந்திவிட்டுகார்ஓட்டியதில் ஒருவர் உயிரிழந்த வழக்கு என நடிகர் சல்மான்கானுக்காகவாதாடியுள்ளார். அண்மையில் தற்கொலை செய்துகொண்டதோனிதிரைப்பட நடிகர்சுஷாந்த்சிங்ராஜ்புத்தின்வழக்கில் நடிகைரியாசக்கவர்த்திற்குசார்பாக ஆஜராகிவாதாடிவருகிறார். இப்படி பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு வாதாடி வரும்சதீஸ்மான்ஷிண்டேஇந்த வழக்கிலும் ஷாருக்கான் மகனுக்காக ஆஜராகி வாதாட உள்ளார்காஸ்ட்லிவழக்கறிஞர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)