coronavirus vaccine pfizer apply to dcgi

Advertisment

உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவிலும் மூன்று தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன. அத்துடன் பல்வேறு வெளிநாட்டு தடுப்பூசிகளும் பரிசோதனை மற்றும் தயாரிப்பில் உள்ளன. இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மத்திய சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்தும், ஊக்கப்படுத்தியும் வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனை செய்து வரும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று விஞ்ஞானிகளுடன் தடுப்பூசி எந்த நிலையில் உள்ளது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில் தனது கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்குமாறு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் (Drugs Controller General of India- DCGI) ஃபைசர் (Pfizer) நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அதில் தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிளினிக்கல் சோதனைகளை நடத்தாமலேயே தடுப்பூசியை விற்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு டிசம்பர் 2- ஆம் தேதி பிரிட்டனும், டிசம்பர் 4- ஆம் தேதி பஹ்ரைனும் தற்காலிக அனுமதி வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.