Skip to main content

இந்தியாவில் பரவும் புதிய வகை கரோனா வைரஸ்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

corona xxb virus circulating India

 

உலகையே அச்சுறுத்தி லட்சக்கணக்கான உயிர் பலிகளை வாங்கிய கரோனா வைரஸை எளிதில் யாராலும் மறக்க முடியாது. உலகில் முதல் முறையாகச் சீனாவின் வுகான் நகரில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த கரோனா வைரஸ், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவி ஏராளமான மரணங்கள், ஊரடங்கு, பொருளாதார முடக்கம் எனப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியது. அதன் பிறகு முகக்கவசம், தடுப்பூசி எனப் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றி படிப்படியாகக் கரோனா தொற்று குறைந்து உலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. 

 

இதனிடையே கரோனா வைரஸ் உருமாற்றமடைந்து ஒமிக்ரானாக பலருக்கும் பரவி வந்த நிலையில், தற்போது XXB என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் மாற்றங்களைக் கண்காணித்து வரும் GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு, இந்தியாவில் 9 மாநிலங்களில் 380  XXB  பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

 

இந்தியாவில் கரோனா பரவல் குறைந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் உருமாறி XXB என்ற புதிய வகையில் பரவி வருவது மக்களின் மத்தியில் சிறிய அச்சத்தைக் கிளப்பியுள்ளது. ஆனால் வைரஸ்களின் உருமாற்றம் பொதுவானது என்றும் தொடர்ந்து வைரஸ்களின் உருமாற்றம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் சுகாதாரத்துறை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அரசு மருத்துவமனைக்கு குளிரூட்டும் இயந்திரம் வழங்கிய எம்.சி.கே.எஸ் அறக்கட்டளை

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
A trust provided air conditioning machine to a government hospital

எம்.சி.கே.எஸ் அறக்கட்டளை அரசு மருத்துவமனைக்கு குளிரூட்டும் இயந்திரம் வழங்கியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி ஜமீன் பல்லாவரத்தில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் சோர்வு அடையாமல் இருக்க ஒரு லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள மூன்று குளிர்சாதன பெட்டிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொருத்தப்பட்டது.

சுகாதார நிலையத்தில் பொருத்தப்பட்ட குளிர்சாதன பெட்டிகளை பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் இயக்கி வைத்தனர்.

பின்னர் இது குறித்து மருத்துவ மகேந்திரன் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் வருகின்றனர். இவர்கள் சோர்வுடன் வருவதை கண்ட எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் மற்றும் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் குளிர்சாதன பெட்டிகளை வழங்கி உள்ளனர். மேலும் தேவையான உதவி செய்வதாக தெரிவித்த அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பாளர் லியோ ஆகாஷ் ராஜ் பேசுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வருவதும், அவர்கள் புழுக்கத்தால் சோர்வு அடைவதையும் எங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் அறிந்து எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  உதவியுடன் குளிர்சாதன பெட்டிகளை வழங்கியதாக தெரிவித்தார்.

இதில் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவமனை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

IND vs ZIM : ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்தியா!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
IND vs ZIM : India beat Zimbabwe to record

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து 7 ஆம் தேதி (07.07.2024) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா அணி சமன் செய்திருந்தது.

இந்நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (10.07.2024) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் ருதுராஜ் கெயிக்வாட் 28 பந்துகளில் 49 ரன்களும், ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 183 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. அதன் பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் இந்த போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் 4வது போட்டி வரும் 13ஆம் தேதி (13.07.2024) நடைபெற உள்ளது.