Skip to main content

சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி- முன்பதிவு தொடங்கியது!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022

 

Corona vaccine for minors - booking begins!

 

நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு இன்று (01/01/2021) தொடங்கியது. தகுதியுடைய சிறார்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

 

https://www.cowin.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பள்ளி அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் நாளை மறுநாள் (03/01/2021) முதல் சிறார்களுக்கு 'கோவாக்சின்' தடுப்பூசிப் போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏழை சிறுவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்த சமூக ஆர்வலர்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 social activist who bought new clothes for poor childrens

 

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் தன்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்து வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளுக்குப் புத்தாடைகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு, வேலூரில் நிரந்தர வீடு கூட இல்லாமல் வாசிக்கும் 11 நரிக்குறவர் குழந்தைகளை வேலூரில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்து வந்தார்.

 

அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த உடைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்ல, ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்த குழந்தைகள் தங்களுக்கான உடைகளை அவர்களே தேர்வு செய்து புதுவித அனுபவத்தைப் பெற்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இவர்களும் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்து வருவதாக அன்பரசன் தெரிவித்தார்.  

 

 

Next Story

வாலிபரிடம் வழிப்பறி; 4 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

trichy painter incident four children involved issue

 

திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் ராஜ்குமார் (வயது 30). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் திருச்சி பொன்மலை பட்டியில் உள்ள ஒரு டிரைவிங் பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கத்தி முனையில் இவரிடம் மிரட்டி பணத்தை பறித்து சென்றனர்.

 

இதுகுறித்து ராஜ்குமார் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் திருச்சி பொன்மலை, பொன்மலைப்பட்டி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை பொன்மலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வழிப்பறி சம்பவத்தில் 4 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.