கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்த நிலையில், தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர், கரோனா தடுப்பூசிப் பரிசோதனை தொடர்பான தரவு ஆய்வுகளை வெளியிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தொடர்ந்தார். மேலும், கட்டாயத் தடுப்பூசிக்கான பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, எந்தவொரு தனிநபரையும் கட்டாயம் தடுப்பூசிச் செலுத்திக் கொள்ளுமாறு கூற முடியாது என்று தீர்ப்பளித்தனர். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை நீக்கவும் அறிவுறுத்தினர். அரசமைப்பு பிரிவு 21- ன் கீழ் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. தடுப்பூசிகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.