
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருந்து வருகின்றது. தனியார் மருத்துவமனைகளில் இந்தக் கரோனா சிகிச்சை அளிக்க அதிகக் கட்டணம் வாங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தற்போது கரோனா நெகட்டிவ் என்று ரிப்போர்ட் தருவதற்கு மருத்துவமனை நிர்வாகத்துக்கு லஞ்சம் கொடுத்தால் கிடைத்துவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உ.பி.யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் தருவதற்கு ரூ.2,500 வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.