Skip to main content

கரோனா பரிசோதனை- புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Corona test- ICMR releases new guidelines!

 

கரோனா பரிசோதனை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐ.சி.எம்.ஆர். அதன்படி, கரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ளவர்கள் தவிர அறிகுறி இல்லையென்றால் மற்றவர்கள், கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. 

 

மாநிலங்களுக்கு இடையே உள்ளூர் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை அவசியமில்லை. வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்கள், கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதில்லை. இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறி இருப்பவர்களும், கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த இணைநோய் இருப்பவர்களும், சர்வதேச பயணிகளும் கட்டாயம் கரோனா பரிசோதனை உட்படுத்தப்பட வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீபெரும்புதூரில் ட்ரோன் சோதனை மையம்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Drone Test Center at Sri Perumbudur
கோப்புப்படம்

 

தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொது சோதனை மையங்களை அமைக்கத் தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் ஆளில்லா விமான (ட்ரோன்) பொது சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது.

 

இந்தியாவில், இத்தகைய சோதனை மையம் கர்நாடக மாநிலம், சித்திரதுர்காவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தனது பயன்பாட்டிற்காக உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களைத் தனித்தனி மையங்களில் சோதனை செய்து வருகின்றன.  இது செலவினத்தை அதிகரிப்பதோடு. சோதனைகளை மேற்கொள்ளக் காலதாமதமும் ஆகின்றது. இந்த இடர்பாடுகளைக் களையும் நோக்கத்துடன் மத்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க டிட்கோ (TIDCO) நிறுவனம் திட்டமிட்டது.

 

இதையொட்டி மத்திய அரசின் மானியத்துடன் செயல்படும் இத்திட்டத்தைச் செயல்படுத்த நான்கு நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து ரூ. 45 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க உள்ளன. இந்த சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்திலேயே சர்வதேச தரத்தில் வழங்கும். இந்த சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.