
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், இன்று கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நாட்டில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழம்பெரும் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கருக்கு தற்பொழுது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் மும்பை மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.