Skip to main content

புதுச்சேரியில் 1000ஐ தாண்டிய கரோனா! 30-ஆம் தேதி வரை அனைத்து வகை மதுபான கடைகள் மூடல்!  

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

 Corona exceeds 1000 in Pondicherry! All types of liquor stores will be closed until the 30th!

 

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 781 பேர், காரைக்காலில் 108 பேர், மாஹேவில் 59 பேர் என 1,021 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,828 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 46,448 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் புதுச்சேரியில் 13 நபர்கள் உயிரிழந்ததால் மாநிலத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55,047 ஆக உள்ளது.

 

இதனிடையே புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, வருகின்ற 30 ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து விதமான மதுபான கடைகள் (FL.1 /  FL.2  / FL.2 சுற்றுலா பிரிவு / கள்ளு மற்றும் சாராயக்கடைகள் ) இயங்க முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்றும், மதுபான உரிமதாரர்கள் உத்தரவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கலால் சட்டம் மற்றும் விதிகள் 1970 கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்