![corona counts surge in andhra schools](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZWyufzaKwkMmD7RmCOwbnFx5aag12IAQKgM1vLMRAZ8/1604648724/sites/default/files/inline-images/dfgdg_6.jpg)
ஆந்திராவில் பள்ளிகள் திறந்து நான்கு நாட்களில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் சிகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகள் திறந்த 2 நாட்களில் 27 பேருக்கு காரோனா தொற்று ஏற்பட்டதால் உடனடியாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் நவம்பர் 2 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த சூழலில், பள்ளி திறக்கப்பட்ட இரு நாட்களில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கு நாட்களில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில பள்ளிகளில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பள்ளிகளை மூடவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.