Skip to main content

''அடுத்தடுத்த ரயில் விபத்துகள் கவலையளிக்கிறது''-தமிழக முதல்வர் இரங்கல்

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

"Continuing train accidents are worrying"-Tamil CM condoles

 

ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது.

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் ஒன்றிய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ''ஜூன் 2023ல் சோகமான பாலசோர் ரயில் விபத்து நடந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் ரயில் மோதிய விபத்து ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

 

மேலும் 'கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள்  மத்திய அரசும், ரயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்' எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் - பிரபலங்கள் வாழ்த்து

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Birthday Wishes to Tamil Nadu Chief Minister - Celebrities

தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் அவரது கட்சியினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். திமுக தலைமை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீண்ட ஆயுளோடும், உடல் நலத்தோடும் மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துக்கள்' என மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 'சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்' என எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், விஜய், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி, பாஜக தமிழக தலைவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.