Consult with all state secretaries !!

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

Advertisment

இன்று (10/05/2020) காலைநிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை59,662-லிருந்து ஆக 62,939 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை1,981- லிருந்து2,109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை17,847- லிருந்து19,358 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் உடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுடா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து இந்த காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.