Skip to main content

முதல் வெற்றியை பதிவு செய்த காங்கிரஸ்

 

 Congress registered the first victory

 

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.

 

12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 130 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும், மற்றவை 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

 

இந்நிலையில் சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தொகுதியில் போட்டியிட்ட டி.ரகுமூர்த்தி என்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தலை விட இந்த முறை 47 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பது கர்நாடக காங்கிரஸ் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !