பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்தசூழலில் அண்மையில் பஞ்சாபிற்கு சுற்றுப்பயணம் செய்த டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், 18 வயதிற்கு மேலுள்ள அனைத்து பெண்களின் வங்கிக் கணக்கிலும் மாதம் 1000 ரூபாய் செலுத்தப்படும். ஒரு வீட்டில் மூன்று பெண்கள் இருந்தால் மூவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
இந்தநிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் ஆண்டுக்கு 8 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இதனைத்தவிர கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் எனவும், ஐந்தாம் வகுப்பு தேர்வாகும் மாணவிகளுக்கு 5 ஆயிரமும், 10 வகுப்பு தேர்வாகும் மாணவிகளுக்கு 15 ஆயிரமும், 12 வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு 20 ஆயிரமம் வழங்கப்படும் எனவும் நவ்ஜோத் சிங் சித்து எனவும் கூறியுள்ளார். அதேபோல் மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு கணினி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.