Skip to main content

பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர்களை சந்திக்கும் ராகுல்!

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கட்சிக்கு தனது குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக  தேர்ந்தெடுக்கும் படியும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தனது முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்று ராகுல் காந்தி 2 நாட்கள் முன்பு திட்டவட்டமாக அறிவித்தார்.

 

 

congress party rahul gandhi meet with congress cms meeting for today

 

 

இதனால் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், அகில இந்திய பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பாகெல் மற்றும் பாண்டிசேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்