Skip to main content

தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Congress leader Mallikarjuna Kharge coming to Tamil Nadu!

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.

இதே வேளையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் நேற்று (24-01-24) அறிவித்தது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என்று நான் முன்பிருந்தே கூறி வருகிறேன். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.  இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். 

Congress leader Mallikarjuna Kharge coming to Tamil Nadu!

இந்த நிலையில், ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று (25-01-24) முதல் பல்வேறு மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கே வரும் பிப்ரவரி 13ஆம் தேதி தமிழகம் வருகிறார். மேலும், அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவரின் தந்தை படுகொலை; அதிரவைக்கும் சம்பவம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
India Alliance Party leader's father incident in bihar

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கினர். எதிர்க்கட்சியினரின் விடாமுயற்சியால் மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது.

இந்த இந்தியா கூட்டணியில் பீகாரில் உள்ள விகாஸ்ஷீல் இன்சான் என்ற கட்சியும் அங்கம் வகித்து வருகிறது. இக்கட்சியின் தலைவராக, பீகார் மாநில முன்னாள் முதல்வர் முகேஷ் சஹானி இருந்து வருகிறார். முகேஷ் சஹானியின் தந்தை ஜித்தன் சஹானி, பீகார் மாநிலம் பிரால் பகுதியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (16-07-24) காலை, ஜித்தன் சஹானி அவரது அறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது வயிறு, மார்பு ஆகிய இடங்களில் கத்திக்குத்தி காயங்களும், வெட்டுக் காயங்களும் இருந்தன. 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவரின் தந்தை படுகொலை செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நிதிஷ்குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

Next Story

இடைத்தேர்தல் முடிவுகள்; இந்தியா கூட்டணி அபார வெற்றி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
by election results India alliance is a huge success

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. இந்நிலையில் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.