/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rss.jpeg)
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் மூன்று நாட்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது, இவ்விழாவை தொடங்கிவைத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் சுமார் 80 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அவர் பேசியதில் சில....
”ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்போதும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று இருந்ததில்லை. நாடு நலம் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் பிரதான கொள்கை. எங்கள் அமைப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் ஒரு முழுமையான ஜனநாயக அமைப்பு. இங்கு தனிநபர்களின் அதிகாரத்துக்கு இடமில்லை. எங்கள் கொள்கைகளை யாரிடமும் திணிப்பதும் இல்லை” என்றார். மேலும் அதில்,”ஹிந்துத்துவம் எங்களை ஒருங்கிணைக்கிறது. நாங்கள் பின்பற்றும் ஹிந்துத்துவம் என்பது யாருக்கும் எதிரானதோ, யாரையும் தாழ்த்த வேண்டும் என்பதற்கானதோ அல்ல.காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்தியாவுக்கு பல சிறந்த தலைவர்களை அளித்துள்ளது” என்று பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)