இந்தியத் தொழில் துறை கூட்டமைப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சியை அடைய ஏற்றவாறு திட்டங்களை தயார் செய்து அறிக்கையை அரசியல் கட்சிகளுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இதில் விவசாயம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அடுத்து வரவுள்ள அரசுக்குப் பரிந்துரைக்கும் வகையில், மாதிரி தேர்தல் திட்ட அறிக்கையை இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த திட்ட அறிக்கை குறித்து சிஐஐ இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறியதாவது, “இந்த திட்ட அறிக்கை பலதரப்பட்ட துறை நிபுணர்கள், தொழில்துறை கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. 2022-ல் இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
அப்போது இந்தியத் தொழில் துறை வலுவா கவும், ஆண்டுக்கு 8% என்ற சிறப்பான பொருளாதார வளர்ச்சியையும், உலக அரங்கில் தொழில்நுட்பத்திலும், வர்த்தகத் திலும் முன்னணியில் இருக்கும் வகையிலான செயல்திட்டங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள பரிந்துரை களை அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளில் இவற்றை சேர்த்துக்கொள்ளும் என்ற நம் பிக்கை உள்ளது” என்றார்.