அண்மையில் காஷ்மீரில் பாஜக மற்றும் மஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. காஷ்மீர் போர் நிறுத்த கொள்கையில் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் பாஜக தன் கூட்டணியை விலக்கிக்கொண்டதாக காஷ்மீர் மாநில பாஜக பொறுப்பாளர் ராம் யாதவ் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து தற்போது ஆளுநர் ஆட்சி அமல்ப்படுத்தப்பட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் முற்றிலும் அழிக்கப்படுவர் என உள்த்துறை அமைச்சர் ராம்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் உள்ள சுமார் 210 தீவிரவாதிகளை சுட்டுக்கொல்ல ராணுவ முகாம் அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிர் சேதத்தை தவிர்க்க என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மற்றும் குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் வீர்கள் என அதிகப்படியானோர் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தியதில் கமாண்டோக்களின் பணி மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ரேடார் போன்ற கருவிகளுடன் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள கமாண்டோக்கள் காஷ்மீர் பாதுகாப்பு படை மற்றும் அங்குள்ள காவல் துறையுடன் இணக்கமாக செயல்படும் விதமாக இன்று கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் வரும் 28-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்கவிருப்பதால் பாதுகாப்பு எச்சரிக்கை இன்னும் பலப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் காஷ்மீரின் எல்லையோர பாதுகாப்பு பற்றி ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் ஆளுநர் வோரா தலைமையில் இன்று நடக்கவிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் மெகபூபா முஃப்தியின் மஜக என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.