Skip to main content

செப்டெம்பரில் நிறம் மாறும் 100 ரூபாய்!! பழைய நூறு ரூபாய் செல்லுமா ??

Published on 19/07/2018 | Edited on 19/07/2018

 

புது நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் புது நூறுரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

 

note

 

 

 

பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டு புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து புதிய 200 ரூபாய் நோட்டுகள் 50 மற்றும் 10 ரூபாய் என அனைத்தும் பல பல வண்ணங்களில் வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில் வரப்போகும் புதிய 100 ரூபாய் நோட்டு பல பாதுக்காப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கும் எனவும் அண்மையில் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நோட்டை விட பெரியவதாகவும் பழைய 100 ரூபாயை விட சிறியதாக ஊதாநிறத்திலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்மையில் வெளியிட்ட 10 பத்து ரூபாய் நோட்டு மற்ற ரூபாய் நோட்டுகளை விட சிறியதாக இருந்தது. நோட்டின் பின்புறம் கோனாக் சூரிய கோவில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரப்போகும் ஊதா நிற புது 100 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி டேவாஸ் ரூபாய் நோட்டு அச்சகத்தில் நடைபெற்றுவருவதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் பழைய நூறு ரூபாய் புழக்கத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. பழைய நூறு ரூபாய் நோட்டுக்களும்  செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது  

சார்ந்த செய்திகள்