Skip to main content

கல்லூரி சேர்க்கை; செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் முடிக்க ஆணை!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

COLLEGE ADMISSION University Grants Commission INSTRUCTION

நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை வரும் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (University Grants Commission-'UGC') தெரிவித்துள்ளது. 

 

கரோனா இரண்டாவது அலை காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், புதிய வழிகாட்டுமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதில், "அனைத்து மாநிலங்கள், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டப் பிறகே முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் தொடங்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 1- ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால், அக்டோபர் 18- ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள், தேர்வுகள், விடுமுறைகள் உள்ளிட்டவற்றை அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூலை 31- ஆம் தேதிக்குள் திட்டமிட வேண்டும். இறுதி பருவத் தேர்வுகளை ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை ரத்துச் செய்யப்பட்டாலோ, மாணவர்கள் வேறு இடங்களுக்கு சென்றாலோ, முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்