Skip to main content

அரசு விழாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் காலில் விழுந்த கலெக்டர்!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
jkl

 

தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகர் ராவ் முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். துணிச்சலுக்குப் பெயர் போன அவர் மாநிலத்தில் பல்வேறு அதிரடிளை அடிக்கடி செய்வது வழக்கம். அதன்படி இந்தியாவில் முதல் மாநிலமாக கரோனா தொடர்பாக மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று முதல் ரத்து செய்து உத்தரவிட்டார் சந்திரசேகர் ராவ்.

 

இதன் மூலம் தெலங்கானா மாநிலம் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதற்கிடையே இன்று சித்திபேட் ஆட்சியர் அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட சந்திரசேகர் ராவ், கட்டடத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அம்மாவட்ட ஆட்சியர் வெங்கடராம ரெட்டி முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம்; வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட முதல்வர்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

Chandrashekar Rao released video clips deal between TRS MLAs join BJP

 

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க பேரம் பேச முயன்றதாகக் கூறி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ் (தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்களை இடைத்தரகர்கள் மூலம் விலைக்கு வாங்க பாஜக முயன்றதாகக் கூறப்பட்டது.

 

அதன்படி, டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த ரேகா காந்த ராவ், குவ்வாலா பாலராஜு, பீரம் ஹர்ஷ்வர்தன் ரெட்டி, பைலட் ரோகித் ரெட்டி ஆகிய நான்கு பேரிடம் இடைத்தரகர்கள் மூலம் பாஜக சார்பாக கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அந்த நான்கு எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் சந்திரசேகர் ராவ் கூறியிருந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ள நிலையில் இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்திருந்தது.

 

Chandrashekar Rao released video clips deal between TRS MLAs join BJP

 

இந்நிலையில், பாஜக, டி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசும் வீடியோ ஆதாரங்களை சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ. 50 கோடி எனப் பேரம் பேசப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

 

 

Next Story

"எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ்.- காங்கிரஸ் நேரடி மோதல்"- ராகுல்காந்தி எம்.பி. பேச்சு! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

tRS-Congress direct clash in upcoming assembly elections- Rahul Gandhi MP Talk!

 

தெலங்கானாவில் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தனித்துப் போட்டியிடப்போவதாக ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார். 

 

தெலங்கானா மாநிலம், வாராங்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, "அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸுக்கும், காங்கிரஸுக்கும் நேரடி மோதல். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். சரியான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வழிவகை செய்யப்படும். தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி செய்வதையே பா.ஜ.க. விரும்புகிறது" என்று குற்றம் சாட்டினார்.