மஹாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் 10 கிலோ அளவு இறைச்சி இருந்துள்ளது. அதனையடுத்து, காவல்துறையினர், காரிலிருந்த 3 சீனர்கள் உட்பட ஐந்து பேரைக் கைது செய்தனர்.
விசாரணையின் போது அது என்ன கறி என தங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர். இதனையடுத்து அதனை ஆய்வுக்கு அனுப்பிய காவல் துறையினர் அது மாட்டு கறி என உறுதிப்படுத்தி பின்னர் அவர்களை கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட 3 சீனர்களும் அங்குள்ள சீன நிலக்கரி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பெரும் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரையும் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.