
அண்டை மாநிலமான ஆந்திராவில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நரசிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று பெண் ஒருவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துக்கொண்டிருந்த பொழுது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் சாமர்த்தியமாகச் செயல்பட்ட மருத்துவர்கள் கைகளிலிருந்த செல்போன் டார்ச்சை பயன்படுத்தி பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் அந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த பெண்களும், கைக்குழந்தையுடன் சிகிச்சை பெற்றுவந்த பெண்களும் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனையில் ஜெனெரேட்டர் இயங்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)