ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கவும், சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த சிறையில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்யவும் கோரி அவரது சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

chidambaram new plea for bail

கடந்த மாதம் 21-ம் தேதி ப.சிதம்பரம் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை 14 நாட்கள் திகார் சிறையில் வைக்க கடந்த 5 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கவும், சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் கோரி அவரது சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.