Skip to main content

தேசியக் கட்சி துவங்கும் சந்திரசேகர ராவ்; உற்சாகத்தில் மது பாட்டில்களை வழங்கிய கட்சி நிர்வாகி! 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

Chandra sekar rao party member in controversial

 

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது டி.ஆர்.எஸ் கட்சியைக் கலைத்துவிட்டு 'பாரத ராஷ்ட்ரிய சமிதி' என்ற கட்சியை இன்று விஜயதசமி நாளில் தொடங்க உள்ளதாக கடந்த மாதம் இறுதியில் தகவல் வெளியாகியது.  அதன்படி இன்று  சந்திரசேகர ராவ், தனது டி.ஆர்.எஸ் கட்சியைக் கலைத்துவிட்டு 'பாரத ராஷ்ட்ரிய சமிதி' என்ற கட்சியை துவங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சந்திரசேகர் ராவ் தேசியக் கட்சி துவங்குவதைக் கொண்டாடும் விதமாக வாரங்கல் பகுதியில் டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த அந்த நிர்வாகி, சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மகன் கே.டி.ராமாராவ் ஆகியோரின் பேனர்களை வைத்து அதற்கு முன்பாக பொதுமக்களுக்கு இலவசமாக மது பாட்டிலும், கோழியையும் வழங்கினார். 

 

அப்போது அவர், சந்திரசேகர் ராவ் பிரதமர் பதவிக்கும் அவரது மகன் கே.டி.ராமா ராவ் தெலுங்கான முதல்வராகவும் ஆகவேண்டும் என்பதே தனது விருப்பம் எனத் தெரிவித்தார். அதேசமயம், இவர் மது பாட்டில்களை வழங்கியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Former Telangana Chief Minister Chandrasekhara Rao admitted to hospital

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல்,  கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்த சந்திரசேகர ராவ்வின் பி.ஆர்.எஸ் கட்சியை காங்கிரஸ் கட்சி வீழ்த்தியிருந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரேவந்த் ரெட்டி நேற்று (07-12-23) மாநில முதல்வராக பதவியேற்றார். 

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தனது வீட்டினுள் நிலை தடுமாறி கீழே விழுந்ததையொட்டி நள்ளிரவு 2 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதான சந்திரசேகர் ராவ்வை மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. 

Next Story

இரண்டு தொகுதியிலும் பின்னடைவை சந்தித்த சந்திரசேகர் ராவ்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023
Chandrasekhar Rao suffered a setback in both the constituencies

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தெலுங்கானாவில் தற்போதைய முதல்வரான பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகரராவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கம்மா ரெட்டி, கஜ்வல்  ஆகிய 2 தொகுதிகளில் அவர் போட்டியிட்டு இருந்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.