கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் பொழுது பேரிடர் மீட்புக்காக மத்திய அரசின் விமானப்படை உபயோகப்படுத்தபட்டது. விமானப்படை மூலம் பலர் மீட்கப்பட்டனர், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் மக்களை மீட்டதற்கு 33.79 கோடி ரூபாய் கேட்டு கேரள அரசிற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய விலையில் அரிசி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வழங்கியதற்காக ரூ.290 கோடி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தில் உதவியதற்கு 34 கோடி ரூபாய் பில் போட்டு அனுப்பிய மத்திய அரசு...
Advertisment