Skip to main content

“மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவுகொள்வது குற்றமல்ல” - மத்திய அரசு

Published on 04/10/2024 | Edited on 04/10/2024
Central Govt said not a crime for husband to force his wife to have intercourse

திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவுகொள்வது குற்றமல்ல என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்து கொள்வதைக் குற்றமாக கருத வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்த நிலையில் இறுதியாக இரு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதன் காரணமாக, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசு பதில் தர உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், கணவன் கட்டாயப்படுத்தி மனைவியிடம் உறவுகொள்வதைக் குற்றமாக கருத முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “இந்த விவகாரம் சமூக ரீதியானதே தவிர, சட்ட ரீதியானது அல்ல. மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொளவதற்கு உரிமை இல்லை என்றாலும், அதனைக் குற்றமாக கருத முடியாது. அதனைக் குற்றமாக கருதினால் திருமண உறவில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதனால் இதனைக் குற்றமாக கருத முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்