பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதாகக் கூறி, இதற்கு முன்னர் விற்கப்பட்ட விலைக்கே விற்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பெட்ரோல் விலை கடந்த 2020- ஆம் ஆண்டு மே 1- ஆம் தேதி அன்று 69.50 ரூபாய்க்கும், 2022- ஆம் ஆண்டு மார்ச் 1- ஆம் தேதி அன்று 95.40 ரூபாய்க்கும், மே 1- ஆம் தேதி அன்று 105.40 ரூபாய்க்கும் விற்கப்பட்டதைப் பட்டியலிட்டார். அது தற்போது, 96.70 ரூபாய்க்கு அதாவது மே மாதத்தின் முதல் வாரத்தில் பெட்ரோல் விற்பனை செய்த விலைக்கே விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை தினமும், 80 காசு, 30 காசு என மீண்டும் உயர தொடங்கும் என்பதை எதிர்பார்க்கலாம், ஆகவே, மத்திய அரசு மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.