Published on 01/07/2022 | Edited on 01/07/2022
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 294 டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஒரு லிட்டருக்கு கூடுதலாக ரூபாய் 13 வரி விதித்தது மத்திய அரசு.
மத்திய அரசின் நடவடிக்கையால் பெட்ரோலுக்கு 6 ரூபாயும், டீசலுக்கு கூடுதலாக 13 ரூபாயும் வரி செலுத்த வேண்டும். ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படுவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.