உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசுத் தடை விதித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோதுமை விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கோதுமைகளைத் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு வாங்குவதால், விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனையைக் குறைத்துள்ளனர்.
கோதுமை வாங்கும் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்தால், உள்நாட்டிலேயே தட்டுப்பாடு ஏற்படலாம் என மத்திய அரசு கருதுகிறது. அதனால் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, ஒப்பந்தம் செய்திருந்தால், கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக உலகச் சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்து வருவதால், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், தற்போது மத்திய அரசு தடை விதித்துள்ளது.