cauvery

Advertisment

Advertisment

இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு நதிநீர் பங்கீடு குறித்து விவாதித்தனர். அப்போது மே மாதத்திற்கு கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு தர வேண்டிய 2 டி.எம்.சி தண்ணீரை இந்த மாதம் முடிவதற்குள் வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு கர்நாடகம் நிர்ணயிக்கப்பட்ட அளவு நீரை வழங்கவும் ஆணையம் உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.2 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடக சரியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.