Skip to main content

தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது - கர்நாடக தரப்பு பிடிவாதம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Can't open water to Tamil Nadu-Karnataka insists


த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது.

 

இன்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக தரப்பு அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் தமிழக தரப்பு அதிகாரிகள் சார்பில் கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி நீர் இருப்பதால் 12,500 கன அடி நீரை கர்நாடக திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்த கவுண்டவுன்; 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

next counten; Alert to 28 districts in 3 hours

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், வரும் டிசம்பர் இரண்டாம் தேதி கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் டிசம்பர்.1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், வேலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னையை அடித்து துவைக்கும் மழை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

nn

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

7 மணிக்குள் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை மயிலாப்பூர், சாந்தோம்,மெரினா, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், அம்பத்தூர், சேத்துப்பட்டு, சேப்பாக்கம், வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி ,பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான செம்பரம்பாக்கம், பூவிருந்தவல்லி, திருமழிசை, திருவேற்காடு ஆகிய பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.

 

விழுப்புரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் வளவனூர், கண்டமங்கலம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, காணை, அரசூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்