Published on 23/02/2019 | Edited on 23/02/2019
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகே 2.71 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. விசாகபட்டினத்தின் அருகே வருவாய் புலனாய்வு துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது இந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஆம்புலன்ஸின் பின்புறத்தில் 1813 கிலோ கொண்ட கஞ்சா மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதன் மதிப்பு சுமார் 2.71 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதே பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன் வாழை இலைகளுக்குள் வைத்து 865 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டு, அது பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.