Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

anurag thakur

 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின் நடைபெற்ற இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

கரோனா நெருக்கடி காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இதனைத் தெரிவித்துள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்