ஓடிசாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள காஷிப்பூரிலிருந்து பெராம் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக சென்றுள்ளது. தட்காட் பாணி என்ற பாலத்தில் மேலே சென்ற அந்த பேருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பேருந்து இருந்தவர்களை மீட்டனர். இதில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் நிகழந்தது குறிப்பிடத்தக்கது.