அடுக்குமாடி கட்டடத்தின் அருகில் மற்றொருவர் குழி தோண்டியதால் அந்த மாடி கட்டடம் ஒருபக்கமாக சரிந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் கெம்பபுரா பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவருக்கு அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் தற்போது மகளிர் விடுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு அருகில் உள்ள இடத்தில் அதன் உரிமையாளர் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக பெரிய குழியை தோண்டியுள்ளார். குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் அந்த குழி தோண்டப்பட்டதால் அருகில் இருந்த ராகுலின் கட்டடம் ஒரு பக்கமாக சரிந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனால் உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தொடுத்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு கட்டடம் சரியாமல் தடுப்புக்களை அமைத்தனர். மேலும் அனுமதி பெறாமல் குழி தோண்டியதாக பக்கத்து இடத்துக்காரரின் மேல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)