மணல் கடத்தல் கும்பல் ஒன்று ஆய்வுக்கு வந்த பெண் அதிகாரியின் தலை முடியை பிடித்து அடித்து கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் பாட்னா அருகே கிராமம் ஒன்றில் மணல் கடத்துவதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. உடனடியாக அங்கு கனிமவளத் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் சென்றார். அப்போது அங்கிருந்த மணல் கடத்தல்காரர்கள் அனைவரும் ஒன்றாகச் சூழ்ந்துகொண்டு பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கியதோடு, அந்தப் பெண் அதிகாரியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர். மேலும் அங்கிருந்த கற்கள், கட்டைகளை கொண்டு அவரை தாக்கினர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது வரை இந்தச் சம்பவம் தொடர்பாக 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.