Skip to main content

“வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிஜ்பூஷண் பாலியல் தொல்லை...” - டெல்லி போலீஸ்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Brijbhushan Singh misbehaved with the wrestlers whenever he got a chance

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராகச் செயல்பட்டு வந்த பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

 

இதையடுத்து எம்.பி.பிரிஜ்பூஷண் சிங்கை எம்.பி பதவியில் இருந்து நீக்கி உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். 

 

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 15 ஆம் தேதி பிரிஜ்பூஷண் சிங் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்ந்தனர். இன்று, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர், “எம்.பி. பிரிஜ்பூஷண் சரண்சிங் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்” என்றார்.

 

தஜிகிஸ்தானில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு வாதிட்ட போலீஸ் தரப்பு வழக்கறிஞர், தஜிகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரிஜ்பூஷண் சரண்சிங் ஒரு மல்யுத்த வீராங்கனையை அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துகொண்டிருக்கிறார். பிறகு தந்தை போல் பழகினேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அங்கு நடைபெற்ற வேறொரு நிகழ்ச்சியின்போதும் மற்றொரு வீராங்கனையிடமும் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்” என்றார். இதனைத் தொடர்ந்து வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அங்கீகாரத்தை ரத்து செய்த உலக மல்யுத்த கூட்டமைப்பு; நெருக்கடியில் இந்திய வீரர்கள்!

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

wwf revoked the membership of the Indian Wrestling Federation

 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்ததாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

 

உலகளவில் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொள்ளும் நாடுகள் உலக மல்யுத்த கூட்டமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவும் அந்த கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றது. தேர்தல் மூலம் நாட்டின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பல்வேறு விதிமுறைகளை  உலக மல்யுத்த கூட்டமைப்பு கொண்டுள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் மல்யுத்த போட்டிகள் அனைத்தும் உலக மல்யுத்த கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரிஜ்பூஷண் சரண் சிங்  தேர்தலில் தனக்கு ஆதரவான ஆட்களையே மீண்டும் நிற்க வைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து நேர்மையாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. 

 

wwf revoked the membership of the Indian Wrestling Federation

 

இந்த நிலையில்தான் உலக மல்யுத்த கூட்டமைப்பு கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அடுத்த 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை தேர்தல் நடத்தப்படாததால் இந்தியாவின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் இந்திய மல்யுத்த வீரர்கள் போட்டியின் போது குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

wrestlers issue BJP MP Brij Bhushan granted interim bail

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வீரர்கள்  நடத்தினார்கள். பின் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீரர்களுடன் கடந்த ஜூன் 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, 15 ஆம் தேதிக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின் வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில்  18 ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆஜராக வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் பாஜக எம்.பி.க்கு பிரிஜ் பூஷனுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் ரூபாயைப் பிணைத் தொகையாக செலுத்தவும் பிரிஜ் பூஷன் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்