A bride who passed away on the wedding day; Shocking cause

திருமணத்தின் போது மணமேடையிலேயே மணப்பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisment

உத்திர பிரதேசம் லக்னோ பகுதியில் உள்ள மஹிலாபாத் பாத்வனா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால். இவரது மகள் ஷிவாங்கி ஷர்மா. 21 வயதான ஷிவாங்கி ஷர்மாவிற்குநேற்று முன்தினம் (டிச.2)திருமணம் நடந்துள்ளது.

Advertisment

மணமேடையில் மாலைகளை மாற்றியதும் புகைப்படம் எடுப்பதற்காக நின்றிருந்தபோதுதிடீரென ஷிவாங்கி ஷர்மா மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரைமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் ஷிவாங்கி ஷர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே ஷிவாங்கி ஷர்மாஉடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். காய்ச்சல் இருந்ததால் அவரின் ரத்த அழுத்தம் குறைவாகவே இருந்துள்ளது. சில நாட்களில் அதிலிருந்து மீண்ட ஷிவாங்கி ஷர்மாவிற்கு திருமணம் நெருங்கும் சமயத்தில் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. திருமணத்தின் போதும் உடல்நலக்குறைவுடன் இருந்ததால் தான் மணக்கோலத்திலேயே உயிர் பிரிந்தது என ஷிவாங்கியின்உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஷிவாங்கியின் இறப்பினை காவல்துறையிடம் தெரிவிக்காமலேயே அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை முடித்துள்ளனர். ஆனால் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தெரிய வர காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.