india china border

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்தாண்டு மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமாரணமடைந்தனர்.இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இந்த சூழலில், சீனாவின் முரண்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, அண்மையில் 50,000 கூடுதல் வீரர்களை சீன எல்லையில் இந்தியா குவித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment

இதற்கிடையே,எல்லையில் உண்மை கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே சீனா நிரந்தர கான்க்ரீட்முகாம்களை அமைத்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்றுஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தன. இதற்கிடையே நேற்று முன்தினம் இந்திய- சீனவெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துஎல்லை பிரச்னைகுறித்து விவாதித்தனர்.

Advertisment

இந்தநிலையில்ராஜ்நாத்சிங்,முன்னாள் பாதுகாப்புத்துறைஅமைச்சர்கள் சரத் பவார், ஏ.கே.அண்டனிஆகியோர் அடங்கிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதிஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோர் கலந்து கொண்டு சீனாவுடனான பிரச்சனையின் தற்போதைய நிலை குறித்து சரத் பவாரிடமும்,ஏ.கே.அண்டனியிடமும் விளக்கமளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.