நேற்று காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை அடுத்து, கொல்கத்தாவிலுள்ள காவல் ஆணையர் இல்லத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ‘ஜனநாயகத்தை காப்போம்’ எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அரசியல் சாசன அமைப்புகள் மீதான பாஜகவின் தொடர் தாக்குதலின் ஒரு பகுதியாகவே மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரத்தை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நிற்கும் என அவர் கூறியுள்ளார்.